குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குக் குட்டிகள்!
26 தை 2018 வெள்ளி 04:19 | பார்வைகள் : 8954
குளோனிங் எனப்படும் இழையவளர்ப்பு முறை மூலம் தாயை ஒத்த இளம் உயிரினங்களை உருவாக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.
இத் தொழில்நுட்பத்தில் 1996ம் ஆண்டின் பிற்பகுதியில் டோலி எனப்படும் செம்மறி ஆட்டுக்குட்டி உருவாக்கப்பட்டிருந்தது.
தற்போது டோலி உருவாக்கப்பட்ட அதே தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குரங்குக் குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதாவது குரங்கு இரட்டையர்கள் பிறந்துள்ளனர், சீன நாட்டு விஞ்ஞானிகளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இக் குளோனிங்கில் Somatic Cell Nucleus Transfer (SCNT) எனும் தொழில்நுட்பத்தினையும் இணைத்து பயன்படுத்தியுள்ளனர்.
79 முறை தோல்வியடைந்து கடைசியாக 127 முட்டைகளில் இருந்து இரண்டு குரங்குகளை உருவாக்கியுள்ளனர்.
குரங்குகளை உருவாக்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் மனிதர்களை உருவாக்குவதும் சாத்தியமாகும் என கூறப்படுகிறது.
எனினும் குழந்தைகளை உருவாக்குவது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.