Paristamil Navigation Paristamil advert login

மாங்காய் புலாவ்

மாங்காய் புலாவ்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9753


 கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் மாங்காயை பலவாறு சாப்பிடலாம். மேலும் மாங்காய் என்றாலே அதை சாப்பிட நா ஊறும். ஆகவே அத்தகைய மாங்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை சற்று வித்தியாசமாக சாதம் அல்லது புலாவ் போன்று சாப்பிடலாம். பொதுவாக மாங்காய் புலாவ் வட இந்தியாவில் தான் பிரபலமானது. அத்தகைய மாங்காய் புலாவ் செய்வது மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாகவும் இருக்கும். இப்போது அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 2 கப் (நீரில் ஊற வைத்தது)
மாங்காய் - 1 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) 
இஞ்சி - 1 இன்ச் (துருவியது) 
பட்டை - 1 இன்ச் 
ஏலக்காய் - 4 
கிராம்பு - 4 
மிளகு - 6 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகத் தூள் - 1 டீஸ்பூன் 
நெய் - 1 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:
 
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பச்சை மிளகாய், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். பின் துருவிய இஞ்சியைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். 
 
அடுத்து மாங்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் மாங்காய் வேகும் வரை வைக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், சீரகத் தூள் தூவி, 2 நிமிடம் வதக்க வதக்கவும். பிறகு அரிசியை போட்டு 5 நிமிடம் கிளறி, அத்துடன் 3 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும். 
 
இப்போது சுவையான மாங்காய் புலாவ் ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்