Paristamil Navigation Paristamil advert login

வங்கிகளின் Mobile Appகளில் வைரஸ்! எச்சரிக்கை

 வங்கிகளின் Mobile Appகளில் வைரஸ்! எச்சரிக்கை

7 தை 2018 ஞாயிறு 11:10 | பார்வைகள் : 8964


உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப் களில் வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் இமெயில்கள் மூலம் ரான்ஸம்வேர் எனும் வைரஸ் கம்ப்யூட்டரில் பரவி அதனிலுள்ள தகவல்களை திருட முயன்றது. 
 
இதனையடுத்து  அதே போல் தற்பொழுது வங்கி மொபைல் ஆப்களில் வைரஸ் தாக்கியுள்ளதாக, ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்கள் வழங்கும் கம்பெனிகளில் ஒன்றான குயிக் ஹீல் செக்யூரிட்டி லேப்(Quick heal security Lab) நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
அதில், android banker a9480 என்னும் வைரஸ் உலகம் முழுவதும் உள்ள 232 வங்கிகளின் மொபைல் ஆப்களை தாக்கியுள்ளதாகவும், இதன் மூலம் பயனாளர்களின் வங்கிகணக்கின் யூசர் நேம், பாஸ்வேர்டு ஆகியவைகள் திருடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் உள்ள எஸ்.பி.ஐ , எச்.டி.எப்.சி , ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளும் இந்த வைரஸ் மூலம் பாதிப்படைந்துள்ளதாக குயிக் ஹீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
எனவே, தேவையற்ற எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில்கள் மூலம் வங்கிகளுக்கான ஆப் லிங்க் வந்தால், அதை தவிர்த்து விட வேண்டுமென வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அறிவுறித்தியுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்