Paristamil Navigation Paristamil advert login

உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு போண்டா

உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு போண்டா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9776


 மாலை வேளையில் பசிக்கும் போது, ஏதாவது காரமாகவும், சூடாகவும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். மேலும் இந்த நேரத்தில் தான் வீட்டில் உள்ளோருடன் ஒன்றாக அமர்ந்து சந்தோஷமாக பேசி விளையாட முடியும், அப்போது சற்று ஸ்பெஷலாகவும், ஈஸியானதாகவும் ஒரு சூப்பரான சுவையில் போண்டா செய்து சாப்பிட்டால், அசத்தலாக இருக்கும். இந்த நேரத்தில் வித்தியாசமாக செய்ய அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பை வைத்து போண்டா செய்து சாப்பிட நன்றாக இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு போண்டா செய்வது எப்படியென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்:
 
பாசிப்பருப்பு - 1 கப் 
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது) 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது) 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் பாசிப்பருப்பை 5-6 மணிநேரம் ஊற வைத்துக் கொண்டு, நன்கு கழுவி, பின் அதனை நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை மசித்து, அத்துடன் அரைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், பெருங்காயத் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு உருளைக்கிழங்கு போண்டா ரெடி!!! இதனை புதினா சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்