Group voice calls அம்சத்தை அறிமுகம் செய்யும் Whats App

24 ஐப்பசி 2017 செவ்வாய் 15:17 | பார்வைகள் : 13734
வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு செயலியில் குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்குவதற்கான சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மற்றும் ஓர் புதிய அம்சம் வழங்குவதை வாட்ஸ்அப் உறுதி செய்துள்ளது. வாட்ஸ்அப் குரூப் வாய்ஸ் கால் அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சேர்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் 2.17.70 பீட்டா பதிப்பில் குரூப் வாய்ஸ் கால் வழங்கப்பட்டுள்ளதாக WaBetaInfo தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.17.70 ஐ.ஓ.எஸ். அப்டேட்டிலும் குரூப் வாய்ஸ் கால் வழங்க்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்குவது குறித்த தகவல்கள் வெளியான போதிலும் இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் வீடியோ கால் அம்சம் வழங்கப்படுவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் குரூப் வாய்ஸ் கால் அம்சம் வழங்கப்படுவதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த அம்சம் வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டது. பேஸ்புக்கில் இதே போன்ற அம்சம் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப் 2.17.70 பதிப்பு சர்வெருக்கு அனுப்பும் கோரிக்கை, நீங்கள் அழைக்கும் நபர் மற்றொரு குரூப் கால் செய்திருப்பதை உறுதி செய்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய மாற்றங்களில் சிறிய ஆப் அளவு, மற்றும் உங்களது மொபைல் நம்பரை மாற்றினால் நண்பர்களுக்கு தெரியப்படுத்துவது உள்ளிட்டவை இடம்பெறுகிறது.
வாட்ஸ்அப் அப்டேட் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில், வாட்ஸ்அப் நம்பரை மாற்றும் போது, வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஒருவர் தனது மொபைல் நம்பரை மாற்றும் போது வேலை செய்யும் என கூறப்படுகிறது.
குரூப் மேனேஜ்மென்ட் சார்ந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி குரூப் உருவாக்குவோருக்கு அதிக அம்சங்களை வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இத்துடன் வாட்ஸ்அப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அன்சென்ட் அம்சமும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வாட்ஸ்அப் செயலியை சுமார் 120 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர், வாட்ஸ்அப் செயலி உலகம் முழுக்க 50-க்கும் அதிகமான மொழிகளும், 10 இந்திய மொழிகளில் இயக்கக் கூடிய வசதியை கொண்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2