WhatsAppஇல் புதிய அம்சம் அறிமுகம்!
20 ஐப்பசி 2017 வெள்ளி 15:39 | பார்வைகள் : 8961
வாட்ஸ்அப் செயலியில் லைவ் லொகேஷன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வசதி எவ்வாறு வேலை செய்கிறது என்ற முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்களின் மூலம் புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் லைவ் லொகேஷன் ஷேரிங் என்ற பெயர் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம் கடந்த சில மாதங்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்தது. இதனை இயக்க அட்டாச் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு கிளிக் செய்ததும் லொகேஷன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் ஷேர் லைவ் லொகேஷன் அம்சத்தை காண முடியும். இதனை கிளிக் செய்ததும் நிஜ நேரத்தில் நீங்கள் இருக்குமிடத்தை உங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்பில் ஒரு காண்டாக்ட் அல்லது க்ரூப் சாட் என அனைவருக்கும் வேலை செய்யும்படி இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. க்ரூப் சாட் செய்யும்போது ஒருத்தருக்கும் மேற்பட்டோ் தாங்கள் இருக்குமிடத்தை பகிர்ந்து கொள்ள முடியும். அனைத்து லைவ் லொகேஷன்களும் ஒரே கிளிக்கில் இயக்ககூடியதாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்றவர்கள் லைவ் லொகேஷனை பார்க்கும் நேரத்தையும் செட் செய்ய முடியும்.
உங்களது லைவ் லொகேஷன் அனுப்பப்பட்டதும் ஸ்டாப் ஷேரிங் அம்சத்தை கிளிக் செய்யலாம், இந்த அம்சம் மேப் கார்டில் காணப்படும். இதே அம்சம் க்ரூப் சாட்டிஸ் லைவ் லொகேஷன் மேப் கிளிக் செய்து பயன்படுத்த முடியும். மேப்பின் கீழ் காணப்படும் ப்ரோஃபைலினை கிளிக் செய்து ஷேரிங்கை நிறுத்த முடியும்.
ஏற்கனவே வாட்ஸ்அப்பில் ஸ்டாடிக் லொகேஷன் ஷேரிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய லைவ் லொகேஷன் அம்சத்தின் மூலம் ஆபத்து காலத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் இருக்குமிடத்தை நிஜ நேரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். வாட்ஸ்அப் லைவ் லொகேஷன் ஷேரிங் அம்சமும் முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்டிருப்பதால் பாதுகாப்பு நிறைந்த அம்சமாகவே இருக்கிறது.