Paristamil Navigation Paristamil advert login

Twitterஇல் ஏற்பட்ட புதிய மாற்றம்!

Twitterஇல் ஏற்பட்ட புதிய மாற்றம்!

29 புரட்டாசி 2017 வெள்ளி 14:14 | பார்வைகள் : 9024


டுவிட்டரில் பதிவிட 140 எழுத்துக்கள் பயன்படுத்த முடியும் என்ற நிலையில் தற்போது அந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
 
சமூக வலைதளமான டுவிட்டர் பெரும்பாலும் பிரலங்கள் பயன்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. அனைவரும் தங்களது கருத்துகளை டுவிட்டரில் டுவீட் செய்வது வழக்கம். ஆனால் டுவிட்டரில் ஃபேஸ்புக் போன்று பெரிய அளவில் பதிவிட முடியாது.
 
டுவிட்டரில் பதிவிட 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் எல்லோருடைய பதிவும் தலைப்பு செய்தி போல் இருந்து வந்தது. தற்போது அந்த விதிமுறையில் மாற்றம் செய்துள்ளனர். இனி 280 வார்த்தைகள் பயன்படுத்தலாம். 
 
டுவிட்டர் நிறுவனம் சோதனை முன்னோட்டமாக தற்போது பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளது. பயனர்களின் கருத்துகளை மேலும் உணர்ச்சிகரமாக மாற்றுவதற்கு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்