Paristamil Navigation Paristamil advert login

Samsung ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்களை சரி செய்ய புதிய சலுகை!

Samsung ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்களை சரி செய்ய புதிய சலுகை!

23 புரட்டாசி 2017 சனி 05:31 | பார்வைகள் : 8565


சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஸ்கிரீன் சரி செய்ய புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெவர் மைன்ட் என அழைக்கப்படும் புதிய சலுகையை பெறுவது எப்படி.
 
சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நெவர் மைன்ட் என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் உடைந்தால் 12 மாதங்களுக்கு ஒரு முறை சரி செய்து கொள்ள முடியும். 
 
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் நெவர் மைன்ட் சலுகைக்கு ரூ.990 கூடுதலாக செலுத்த வேண்டும். அந்த வகையில் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் உடைந்தால் ஒருமுறை மட்டும் மாற்றிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் பணம் செலுத்தியது முதல் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சாம்சங் நெவர் மைன்ட் திட்டத்தினை சாம்சங் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதிக்குள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
 
சாம்சங் கேலக்ஸி ஜெ, கேலக்ஸி ஏ,. கேலக்ஸி சி, கேலக்ஸி ஆன், கேலக்ஸி S மற்றும் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நெவர் மைன்ட் திட்டத்தை பெற முடியும். புதிய சலுகையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 12 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் தங்களது ஸ்கிரீன் உடையும் போது சரி செய்ய முடியும் என்ற நிம்மதியை வழங்குகிறோம் என சாம்சங் இந்தியா மூத்த துணை தலைவர் அசிம் வர்சி தெரிவித்துள்ளார்.
 
தற்சமயம் வரை சுமார் 15 லட்சம் பேர் பயன்படுத்தி வரும் சாம்சங் பே சேவை வேகமாக பிரபலமாகி வருகிறது. இந்த செயலி சாம்சங் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை மிக எளிமையாக பணம் செலுத்த செய்யும் சேவையாக விளங்கி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
சாம்சங் பே சேவையில் பேடிஎம் மற்றும் மொபிகுவிக் போன்ற மொபைல் வாலெட்களுக்கான யூனிஃபைடு பேமென்ட் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தொடர்ந்து முன்னணி இடத்தை சாம்சங் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்