விரைவில் வெளியாகும் Android Oreo கொண்ட Nokia 9!
19 புரட்டாசி 2017 செவ்வாய் 18:02 | பார்வைகள் : 8896
நோக்கியா 9 எச்எம்டி குளோபல் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நோக்கியா நிறுவன ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 மற்றும் நோக்கியா 8 ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நோக்கியா 9 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்சமயம் நோக்கியா 9 GFXBench தளத்தின் மூலம் கசிந்துள்ளது. இதில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியாவின் உயர் ரக மாடல்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய நோக்கியா 8 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் அதிநவீன டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் 6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் குவாட் எச்டி 2560x1440 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க செய்ஸ் சென்ஸ் கொண்ட டூயல் கேமரா- 13 எம்பி + 13 எம்பி கேமரா, மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புற கேமராக்களில் RGB மற்றும் மோனோக்ரோம் சென்சார்கள் வழங்கப்பட்டிருப்பதால், குறைவான வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்.