“Blue Whale” விளையாட்டின் 50 டாஸ்க் இவைகள்தான்!
7 புரட்டாசி 2017 வியாழன் 11:40 | பார்வைகள் : 8590
2013ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிலீப் புட்க்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விளையாட்டில் 50 டாஸ்க்குகள் கொடுக்கப்படும். இதை விளையாடுபவருக்கு தினமும் குறுந்தகவல் ஒன்று அனுப்பபடும், அந்த குறுந்தகவலில் கொடுக்கப்படுள்ளவைகளை அப்படியே செய்யவேண்டும். பின்பு ஆட்ட முடிவான 50வது நாளில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று வரும்.ஸ
01 : ஒரு ரேஸர் கொண்டு கையில் “f57” என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
02 : அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும்.
03 : ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
04 : காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
05 : நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது YES என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் – கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும் (அதாவது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்)
06 : சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு
07 : கையில் “f57” என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
08 : ஒரு ரஷ்யன் ஆன்லைன் சமூக ஊடக மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையான கொண்டெக்ட் (VKontakte) அக்கவுண்டில் #i_am_whale என்று ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.
09 : பயத்தை நீங்கள் கடக்க வேண்டும்.
10 : அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும்.
11: ஒரு ரேஸர் கொண்டு கையில் திமிங்கலம் ஒன்றை செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
12: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை நாள் முழுவதும் பார்க்க வேண்டும்.
13: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் இசையை கேட்க வேண்டும்.
14: உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்.
15 : பல முறை ஒரு ஊசி கொண்டு கையை குத்திக்கொள்ள வேண்டும்.
16 : அவர்களுக்கு அவரே வலியை ஏற்படுத்தி, நோய்வாய்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
17 : கண்டுபிடிக்க முடிந்த மிகவும் உயரமான கூரையின் மீது ஏற வேண்டும், சில நேரம் விளிம்பில் நிற்க வேண்டும்.
18 : ஒரு பாலத்தின் மீதேறி அதன் விளிம்பில் நிற்க வேண்டும்.
19 : ஒரு கிரேன் மீது ஏற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
20 : விளையாடுபவர் நம்பகமானவரா எனக் கண்காணிப்பாளர் கேட்டறிவார்.
21 : ஸ்கைப் உதவியுடன் மற்றொரு திமிங்கலத்துடன், அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்.
22 : ஒரு கூரை மீதேறி, அதன் விளிம்பில் உட்கார்ந்து கால்களை தொங்க விட வேண்டும்.
23 : மற்றொரு சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.
24 : இரகசிமான டாஸ்க்.
25 : திமிங்கலத்துடன் (அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன்) சந்திப்பு நிகழ்த்த வேண்டும்.
26 : எப்போது மரணிக்க வேண்டுமென்ற திகதியைக் கண்காணிப்பாளர் சொல்வார், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
27 : அதிகாலை 4:20 மணிக்கு விழித்து அருகாமையில் கண்டுபிடிக்க முடிந்த தண்டவாளங்கள் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.
28 : ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக்கூடாது.
28:“நான் ஒரு திமிங்கிலம்” என்ற சபதமெடுக்க வேண்டும்.
30-49 : ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர் அனுப்பும் திகில் வீடியோக்கள் மற்றும் இசையை கேட்க வேண்டும், நாள் ஒன்றிற்கு ஒரு வெட்டை உடலில் நிகழ்த்த வேண்டும் மற்றும் ஒரு “திமிங்கலத்துடன்” பேச வேண்டும்.
50 : ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே ஏறி அங்கிருந்து குதித்து மரணிக்க வேண்டும்.
இந்த 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, குறிப்பாக ஒருவர் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் எழுவதை கண்டால் அல்லது உடலில் காயங்கள் ஏற்படுத்திக் கொள்வதை அறிந்தால் அல்லது ஒருவர் தன்னை மிகவும் தனிமை படுத்திக்கொள்வதாய் உணர்ந்தால் உஷாராகி கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை சேர்ந்த அந்த நபரோ அல்ல உங்களின் நண்பரோ ப்ளூ வேல் கேமின் பிடியில் சிக்கியுள்ளார் என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள், அவரையும், அவரின் உயிரையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.