இரண்டு வித அளவுகளில் தயாராகும் iPhone 8
6 ஆவணி 2017 ஞாயிறு 08:59 | பார்வைகள் : 9079
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 8 இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் கிடைத்துள்ள தகவல்களில் வெளியான முழு விவரத்தை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரீமியம் OLED ஐபோன் இரண்டு வித அளவுகளில் வெளியாகும் என்ற தகவல் சாம்சங் டிஸ்ப்ளே தயாரிப்பு பணிகள் நடைபெறும் A3 ஆலையில் இருந்து கசிந்துள்ளது. இதே ஆலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான OLED பேனல்கள் தயாரிக்கப்படுகிறது.
ஆகஸ்டு மாத இறுதியில் ஆப்பிள் ஐபோன்களுக்கான OLED-க்கள் முழுவீச்சில் தயாரிக்கப்படும் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ஆலையில் ஐபோன்களுக்கென 5.8 மற்றும் 6.0 இன்ச் அளவுகளில் OLED-க்கள் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7S மாடலில் எல்சிடி வகை டிஸ்ப்ளேக்களையும், 5.8 இன்ச் அளவில் OLED ஐபோன் ஒன்றும் வெளியிடப்படும் என கூறப்பட்டது. இத்துடன் ஐபோன் 8 அல்லது ஐபோன் X என்ற பெயரில் ஸ்பெஷல் எடிஷன் ஐபோன் ஒன்றும் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
இம்முறை வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய ஐபோன் சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். குறைந்த அளவு தயாரிப்பு மற்றும் அதிகபட்ச வரவேற்பு புதிய ஐபோன் பற்றாக்குறைக்கு காரணங்களாக அமையும். தற்போதைய தகவல்களின் படி ஆண்டு முழுக்க தயாரிக்கப்படும் பட்சத்தில் 124 மில்லியன் 6.0 இன்ச் OLED பேனல்களும், 130 மில்லியன் 5.8 இன்ச் OLED பேனல்களும் தயாரிக்க முடியும்.
இதில் 60 சதவிகித தயாரிப்பு சாத்தியம் என்பதால் 75 மில்லியன் 6.0 இன்ச் பேனல்களும், 79 மில்லியன் 5.8 இன்ச் பேனல்களும் ஐபோன்களுக்கென பிரத்தியேகமாக தயாரிக்க முடியும். 200 மில்லியன் என்ற விற்பனை அளவுகளில் இருப்பதைத் தொடர்ந்து கட்டாயம் பற்றாக்குறை ஏற்படும் என்பது உறுதியாகிறது.
முன்னதாக டிம் குக் வெளியிட்ட தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது ஏர்பாட் சாதனங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு காரணமாக சாதனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் இதே நிலை புதிய ஐபோன்களுக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.