80 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட தேவதை துகள்!
26 ஆடி 2017 புதன் 16:18 | பார்வைகள் : 8318
தேவதை துகள் என்ற ஒன்றை 80 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னர் அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், தனக்குள்ளேயே எதிர்துகளை கொண்டுள்ளதே இதன் சிறப்பம்சமாகும்.
1928ம் ஆண்டு பால் டிரக் என்ற இயற்பியலாளர் அனைத்து அடிப்படை துகள்களுக்குள்ளும் அதற்குரிய எதிர்துகள்கள் உண்டு என்றும், அவை ஒரே மாதிரியான எதிர்விசை கொண்ட இரட்டையர்கள் என்றும் கூறினார்.
இதன்பின்னர் 1937ம் ஆண்டு ஃபெர்மைன் என்ற துகள்களுக்குள் எதிர் துகள்கள் இருப்பதாக எட்டோர் மஜோரனா தெரிவித்தார்.
இவையே தேவதை துகள்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன, தற்போது சுமார் 80 ஆண்டுகளுக்கு பின்னர் தேவதை துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு மற்றும் கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகளே இதனை கண்டறிந்துள்ளனர்.
எனினும் தேவதை துகள்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.