MS paint செயலியை மூடுவதாக அறிவிப்பு

26 ஆடி 2017 புதன் 15:44 | பார்வைகள் : 10898
கணினி உலகின் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ் பெயிண்ட் செயலியை மூடுவதாக அறிவித்துள்ளது
கடந்த 1985-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எம்.எஸ் பெயிண்ட், விண்டோஸ் 1.0 வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. சிறுவர்கள் வரைந்து பழக ஏதுவாக அமைந்தது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 இயங்குதளத்தின் கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் எம்.எஸ் பெயிண்ட் இடம்பெறவில்லை. இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதற்கு பதிலாக கடந்த ஆண்டு முப்பரிமாண படங்களையும் வரையப் பயன்படும் வகையில் பெயிண்ட் 3டி எனும் புதிய வெர்ஷனை வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் எம்.எஸ். பெயிண்ட்டுக்கு மூடுவிழா நடத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெயிண்ட்டுக்குப் பதிலாக விண்டோஸ் 10 இயங்குதளத்தின் புதிய அப்டேட்டில் பெயிண்ட் 3டி இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.