WhatsAppஇல் இனி YouTube வீடியோக்களை பார்க்கலாம்!
20 ஆடி 2017 வியாழன் 12:25 | பார்வைகள் : 8755
வாட்ஸ்அப் மொபைல் ஆப் உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் மெசென்ஜர் அப்ளிகேஷனாக வலம் வருகிறது. ஹைக், டெலிகிராம் உள்ளிட்ட அப்ளிகேஷன்களை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது.
வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி, கோப்புக்களை பரிமாறும் வசதி, ஸ்டேடஸ் மாற்றி கொள்ளும் வசதி போன்ற பலவற்றை வாட்ஸ்அப் வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை WABetaInfo தொழில்நுட்பத்தின் மூலம் வாட்ஸ்அப் வழியாக பயனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
அதாவது தற்போது வாட்ஸ்அப்பில் அனுப்பபடும் யூடியூப் லிங்க்கை ஓபன் செய்தால் அந்த லிங்க் யூடியூப் பக்கத்துக்கு சென்று பின் வீடியோ பிளே ஆகும். ஆனால் புதிய வசதியில் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் ஆப்பிளிக்கேஷனுக்கு உள்ளேயே பார்த்து மகிழ முடியும். யூடியூப் பக்கத்துக்கு செல்லாது சாதாரண வீடியோ பதிவுகளை பார்ப்பது போன்று பார்க்கலாம். இது விரைவில் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
யூடியூப் பக்கத்துக்கு செல்லாமல் வாட்ஸ்அப்பிலே வீடியோ பார்ப்பதால் வீடியோவை பார்த்து கொண்டே சாட்டிங் செய்ய இயலும். இளைஞர்கள் மத்தியில் இந்த புதிய அம்சம் நல்ல வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பீட்டா சோதனை செயல்பாட்டில் உள்ள இந்த புதிய அம்சமானது ஆண்ட்ராய்டு போனில் மட்டுமில்லாது ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6S, ஐபோன் 6S +, ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகியவற்றிலும் அப்டேட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.