பேஸ்புக் பயனர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

4 கார்த்திகை 2018 ஞாயிறு 13:30 | பார்வைகள் : 11624
அண்மையில் பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகளும் உள்ளடக்கம்.
இவ்வாறு திருடப்பட்ட சுமார் 81,000 பயனர்களின் குறுஞ்செய்திகளை விற்பனை செய்யவுள்ளதாக ஹேக்கர்கள் அறிவித்துள்ளனர்.
இக் குறுஞ்செய்திகள் அனைத்தும் அந்தரங்க தன்மை வாய்ந்தவையாகும்.
உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரேஸில் உட்பட மேலும் சில நாட்டு பயனர்களின் குறுந்தகவல்களும் இதற்குள் அடங்குகின்றன.
எவ்வாறெனினும் குறித்தஹேக்கர்கள் 120 மில்லியன் பயனர்களின் தகவல்கள் வைத்திருப்பதாகவும், ஒவ்வொருவரினுடைய தகவல்களையும் 10 Cents எனும் பெறுமதி வீதம் விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 81,000 பயனர்களின் தகவல் மாதிரிகளை முதற்கட்டமாக விற்பனை செய்யவுள்ளனர்.
இந்த அதிர்ச்சி தகவலை பிபிசி நிறுவனம் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.