Facebook பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்..!

14 ஐப்பசி 2018 ஞாயிறு 03:20 | பார்வைகள் : 12349
உலகின் எந்த மூலையில் இடம்பெறும் அனைத்து சம்பவங்களையும் உடனடியாக உலகெங்கும் எடுத்துச் செல்லக்கூடிய வலைத்தளமாக பேஸ்புக் திகழ்கின்றது.
இதுவே பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு ஏதுவாகவும் இருக்கின்றது.
அத்துடன் சட்டரீதியற்ற முறையிலான அரசியல் விளம்பர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக சுமார் 800 வரையிலான பேஸ்புக் பக்கங்களையும், கணக்குகளையும் நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
இவற்றுள் 559 பக்கங்களும், 251 கணக்குகளும் உள்ளடங்குகின்றன.
இவை அனைத்தும் பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியுள்ளதுடன் ஸ்பாம்களை ஷேர் செய்துள்ளன.
பேஸ்புக் ஆனது சிறந்த முறையிலான சேவையினை தனது பயனர்களுக்கு வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாகவே இச் செயற்பாடு பார்க்கப்படுகின்றது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3