பேஸ்புக் பயனாளிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

30 புரட்டாசி 2018 ஞாயிறு 11:08 | பார்வைகள் : 11201
சுமார் 50 மில்லியன் பேரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 மில்லியன் பேரின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது, பேஸ்புக் பயனாளிகளின் கணக்குகள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே 50 மில்லியன் பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் என்பவர் கூறுகையில்,
இக்குறைபாட்டை பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25ம் திகதி மாலை கண்டறிந்தனர்.
இதனை சரிசெய்யும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர், பேஸ்புக்கில் உள்ள View As என்ற வசதியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
எனவே தற்காலிகமாக இது செயல்படாது என தெரிவித்துள்ளார்.
ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியும் வழி
நமது செல்போனிலோ, கணனியிலோ முதன்முறையாக லாக் இன் செய்யும் போது Save Password என்ற ஆப்ஷனை கிளிக் செய்வோம், இதனால் அடுத்த முறை லாக் இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேட்காது.
ஆனால் ஒருவேளை உங்களது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால், ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது.
லாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும், அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.
எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்து கொள்ளலாம்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3