Paristamil Navigation Paristamil advert login

குறுஞ்செய்திகள் கசிவு - டுவிட்டர் நிறுவனத்தின் பகீர் தகவல்

குறுஞ்செய்திகள் கசிவு - டுவிட்டர் நிறுவனத்தின் பகீர் தகவல்

23 புரட்டாசி 2018 ஞாயிறு 02:28 | பார்வைகள் : 8271


பயன்பாட்டாளர்கள் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் டிவிட்டரில் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஓராண்டிற்கு மேலாக, சில பயன்பாட்டாளர்கள் தனிப்பட்ட முறையில் பரிமாறிக் கொண்ட குறுஞ்செய்திகள் மூன்றாம் தரப்பினருக்கு கசிந்திருக்கலாம் என டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த மென்பொருள் பிழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டிவிட்டரினுள் நுழைந்தவுடன் அதில் குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையானது 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் நீடித்து வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்தப்பிழையினால் மொத்தம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை வெளியிடாத அந்நிறுவனம், மொத்த பயன்பாட்டாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானோருக்கு மட்டுமே இது பிரச்சனையாக இருப்பதாக கூறியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்