Paristamil Navigation Paristamil advert login

கைபேசியைச் கால்சட்டைப் பையில் வைக்கவேண்டாம்...! எச்சரிக்கும் வல்லுனர்கள்

கைபேசியைச் கால்சட்டைப் பையில் வைக்கவேண்டாம்...! எச்சரிக்கும் வல்லுனர்கள்

2 புரட்டாசி 2018 ஞாயிறு 13:50 | பார்வைகள் : 8217


வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்ற பட்டியலில் இன்று கைபேசியும் அடங்கியுள்ளது.
 
அது ஆடம்பரப் பொருள் பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெற்று அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
 
எங்கே சென்றாலும் அதைக் கையோடு எடுத்துச் செல்கிறோம்; கைபேசியில்லாமல் நமக்கு கையுடைந்தது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.
 
கைபேசியை நம்மோடு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, கால்சட்டைப் பையில் வைக்கிறோம்.
 
ஆனால், இந்தப் போக்கு உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 
கம்பியில்லாக் கட்டமைப்புடன் இணையும்போது கைபேசி கதிர்வீச்சை வெளியிடுகிறது.
 
கால்சட்டைப் பையில் இருக்கும்போது கைபேசியிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் பாதிப்பு, தனியாக அதைப் பையிலோ ஒரு தாங்கியிலோ வைப்பதைக் காட்டிலும் அதிகம்.
 
சொல்லப்போனால், கால்சட்டைப் பையில் கைபேசியை வைக்கும்போது கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு, இரண்டிலிருந்து ஏழு மடங்கு வரை அதிகரிக்கிறது.
 
கால்சட்டையில் வைக்கும் கைபேசியால், இடுப்பு எலும்பு பலவீனமடைந்து, எலும்பின் அடர்த்தி குறைவதாக ஆய்வாளர்கள் கூறினர்.
 
ஆண்மைக் குறைவுக்கும் அது இட்டுச் செல்லக்கூடும்.
 
எலும்பு, சதை ஆகியவற்றுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் கதிர்வீச்சு மரபணுக்களை மாற்றும் வாய்ப்பும் உள்ளது.
 
மனவுளைச்சல், சீரற்ற இதயத் துடிப்பு, கருவுறுதலில் பிரச்சினைகள் ஆகிவற்றையும் கதிர்வீச்சு ஏற்படுத்தலாம்.
 
திறன்பேசிகளின் தொடுதிரை உடையும் வாய்ப்பும் இதில் அதிகம்.
 
திறன்பேசிகளையும், பணப்பையையும் கால்சட்டையின் பின்புறத்தில் வைப்பது இன்னும் அதிகக் கேடு விளைவிக்கும்.
 
அவை இரண்டும் உட்காரும்போது அழுத்தப்படுவதைத் தவிர்க்க, நாம் சமநிலையற்ற வகையில் உட்காருவோம்.
 
அதன் காரணமாகக் கடுமையான முதுகுவலி வரலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
 
கால்சட்டைப் பையில் கைபேசியை வைக்காமல் வேறொரு பையில் தனியாக வைத்தால் இம்மாதிரியான உடல்நல பாதிப்புகளைத் தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்