தற்கொலை செய்யத் தூண்டும் WhatsApp சவால் - பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை

19 ஆவணி 2018 ஞாயிறு 01:35 | பார்வைகள் : 10958
அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபட Whatsapp மூலம் தூண்டும் 'Momo' சவாலுக்கு அர்ஜெண்டினாவில் 12 வயதுச் சிறுமி பலியானதாக நம்பப்படுகிறது.
'Momo' மிரட்டல்களின் காரணமாக அந்தச் சிறுமி தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.
'Momo' சவால் என்றால் என்ன?
'Momo' சவால் Facebook குழு ஒன்றில் தொடங்கியது.
அந்தக் குழுவில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்வது சவால்.
தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்பவர்களுக்குச் சிறு, சிறு சவால்கள் கொடுக்கப்படும்.
எடுத்துக்காட்டாக இரவு முழுவதும் கண்விழித்து இருப்பது.
சவாலில் ஈடுபடுவோர் தங்கள் சவாலை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதைக் காணொளி எடுக்க வேண்டும்.
அதை 'Momo' தொலைபேசி எண்ணுக்கு அனுப்பவேண்டும்.
ஒவ்வொரு முறையும் சவால்கள் கடினமாகும்.
பின்னர் அவை அபாயகரமானவையாகவும் மாறும்.
அதில் ஈடுபடுவது, பெரும்பாலும் இளம் வயதினர்.
அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்ள 'Momo' சவால் விடும்.
மறுத்தால் 'Momo' அவர்களது தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் கூறுவதாக மிரட்டும்.
பயங்கரமான படங்களும் காணொளிகளும் அனுப்பப்படும்.
சிலருக்கு இரவு நேரத்தில் அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் வரும்.
'Momo' அவர்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டும்.
பெற்றோரிடையே கவனம் தேவை
'Momo' சவாலால் இளம் வயதினர் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
சவால் சிங்கப்பூரை எட்டியுள்ளதாக இதுவரை தகவல் இல்லை.
இருப்பினும் எது நிஜம், எது கற்பனை என்று எளிதில் வேறுபடுத்த சிரமப்படும் இளம் வயதினரைப் பெற்றோர் கவனிப்பது முக்கியம்.
1. பிள்ளைகளின் இணைய நடவடிக்கையைக் கவனியுங்கள். இணையத்தில் அபாயம் விளைவிக்கக்கூடிய 'விளையாட்டுகளும்' இருப்பதை அவர்களுக்கு உணர்த்தி கவனமாகச் செயல்பட அறிவுரை கூறுங்கள்.
2. பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். தற்கொலை செய்துகொள்வது எந்த விதத்திலும் ஒரு தீர்வாக அமையாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.
3. பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனியுங்கள். வழக்கத்தை விட அவர்கள் மனவுளைச்சலுடன் காணப்பட்டால் அவர்கள் என்ன பிரச்சினையை எதிர்நோக்குகிறார்கள் என்று கனிவோடு விசாரித்து அதற்குத் தீர்வுகாண உதவுங்கள்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1