Samsung Galaxy Note9 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

5 ஆவணி 2018 ஞாயிறு 13:21 | பார்வைகள் : 11269
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சாம்சங நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 அறிமுக வீடியோ இணையத்தில் லீக் ஆனதில் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தெரியவந்தது. இந்நிலையில், ஸ்மார்ட்போன் பெட்டியின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி 6.4 இன்ச் QHD+ சூப்பர் AMOLED ஸ்கிரீன், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இது முந்தைய கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலை விட பெரியதாக இருக்கும். இதன் சிப்செட் மற்றும் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய 512 ஜிபி வெர்ஷனும் அறிமுகமாகிறது, எனினும் 8 ஜிபி ரேம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சாம்சங் கேலக்ஸி நோட் 9 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் / அட்ரினோ 630 GPU
- ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர் / மாலி G72MP18 GPU
- 6ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி / 512 ஜிபி மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர், எல்இடி ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
- 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்பி ஆட்டோ ஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, வைடு-ஆங்கிள் லென்ஸ்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் AKG, Dolby Atmos டியூன் செய்யப்பட்டுள்ளன
- கைரேகை சென்சார், ஐரிஸ் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங், வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக், என்ஜினீர்டு புளு மற்றும் ஆர்டிசன் காப்பர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் 128 ஜிபி மாடலின் விலை 69,990 ரூபெல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.75,705), 512 ஜிபி விலை 89,990 ரூபெல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.97,340) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1