யூடியூப் அறிமுகம் செய்யும் புதிய நடைமுறை!
15 ஆடி 2018 ஞாயிறு 11:11 | பார்வைகள் : 9174
யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள்.
இவ்வாறான வீடியோக்களை திருடி மீண்டும் தரவேற்றம் செய்யும்போது அவ் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் அழித்துவிடும்.
ஆனால் காப்புரிமை பெறாத ஏனைய சில பயனர்களுக்கு அவர்களின் வீடியோக்கள் களவாடப்படும்போது எச்சரிக்கை செய்யும் வசதியினை யூடியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இரு வேறு பயனர்களால் தரவேற்றம் செய்யும் வீடியோக்கள் மிகவும் ஒன்றை ஒன்று ஒத்ததாக இருக்கும் சந்தர்ப்பத்திலும் இவ் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.
எவ்வாறெனினும் இவ் வசதியானது 100,000 மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனல்களுக்கு மாத்திரமே தற்போது கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.