Gmail-யில் அறிமுகமாகும் புதிய வசதி!
20 வைகாசி 2018 ஞாயிறு 10:34 | பார்வைகள் : 8975
Gmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், Nudge எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான Mention எனும் அம்சம், மின்னஞ்சல் type செய்யப்படும் போது இடையே மற்றவர்களை Tag செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது.
இந்நிலையில், Gmail-யில் ’Nudge’ எனும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் Set செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும்.
இந்த புதிய Nudge மூலமாக குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தை Set செய்து, மின்னஞ்சல் மீண்டும் எப்போது Inbox-யில் தோன்ற வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு செய்ததும் குறிப்பிட்ட மின்னஞ்சல் உங்களது Inbox-யில் தெரியும். இதனைத் தொடர்ந்து, உங்களுக்கு வரும் புதிய மின்னஞ்சல்களை கமிரா மூலம் பார்க்கப்படும்.
Nudge அம்சம் குறிப்பிட்ட நேரத்தில் மின்னஞ்சல்களை கொண்டு வருகிறது. மேலும், இந்த அம்சம் தானாகவே Activate செய்யப்பட்டு இருக்கும் நிலையில், விரும்பாதவர்கள் இதனை Switch off செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. Nudge செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.