மூளையையும் மாற்றிக் கொள்ளலாம்! மருத்துவ உலகின் ஆச்சரிய ஆய்வு
29 சித்திரை 2018 ஞாயிறு 12:26 | பார்வைகள் : 8601
அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் உயிர் பிரிந்த பிறகு 36 மணி நேரம் மூளையின் நியூரான் செல்களை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வுக்குழு தலைவர் Nenad Sestan உயிரிழந்த சுமார் 100 பன்றிகளின் உடலிலிருந்து தனியே எடுக்கப்பட்ட மூளைகளுக்கு ஆக்சிஜன் நிறைந்த செயற்கை ரத்தம் பாய்ச்சி சோதனை மேற்கொண்டார்.
அதில் பெரும்பாலான மூளைகளில் இருந்த பல பில்லியன் செல்கள் உடலை விட்டுப் பிரிக்கப்பட்ட 36 மணி நேரம் வரை உயிர்ப்போடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பன்றி மூளையில் மின்காந்த அலைகள் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்த பின்னர் இயல்பாகவே மூளையானது சுயமாக விழிப்பு நிலையில்( consciousness) இருக்காது என்பதை அறிந்துகொண்டோம்.
ஆனால் விழிப்பு நிலையில் இல்லை என்பதற்காகவே மூளை உயிருடன் இல்லை என கூறிவிட முடியாது.
உயிர்ப்புடன் உள்ள மூளை உடல் நரம்புகளின் உதவியுடன் விழிப்பு நிலையை அடையும் என்று ஆய்வுக்குழு தலைவர் கூறியுள்ளார்.
இதே முறையை உயிரிழந்த மனிதனின் மூளையோடு பயன்படுத்தி சோதனை மேற்கொண்டு வெற்றி கண்டால், மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முழுவதும் உயிர்ப்போடு வைத்து பயன்படுத்த இது உதவும் என ஆய்வுக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.