மொத்த Facebook விவரத்தையும் ஒரே நொடியில் திருடமுடியும்!

11 சித்திரை 2018 புதன் 12:33 | பார்வைகள் : 12452
பேஸ்புக் விபரங்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் திருட முடியும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் கண்டுப்பிடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதில் நாம் எல்லோரும் பார்க்கும்படி பதிவிடும் ஸ்டட்டஸ் மட்டுமின்றி, இன்பாக்சில் அனுப்படும் மெசேஜ்கள், ’ஒன்லி மீ’ ப்ரைவஸியில் வைத்திருக்கும் யாருக்கும் பகிராத புகைப்படங்களையும் 30 நிமிடத்தில் ஒரே க்ளிக்கில் ஒருவர் திருடிவிட முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம்! இதில் க்ரேடிட் கார்டு தகவல் துவங்கி ஐபி அட்ரஸ், ஃபேஸ்புக் பேஜ் தகவல் என 70 தகவல்களை ஒற்றை க்ளிக்கில் தந்துவிடுகிறது பேஸ்புக்.
இந்த டேட்டாக்கள் எப்படி பதிவிறக்கம் செய்யப்படுகிறது?
பேஸ்புக் செட்டிங்கில் Download Facebook Copy என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் நமது டேட்டா மொத்தமும் காப்பி எடுக்க துவங்கிவிடும்.
அதன் பின் ஒரு நோட்டிபிகேஷன் வரும் நிலையில் மொபைலில் வை-பை மூலமாகவோ அல்லது கணினியில் அதிவேக இணைய சேவை மூலமாகவோ பதிவிறக்கம் செய்ய முடியும்.
பேஸ்புக் கணக்கை பாதுகாப்பது எப்படி?
Settings -> Security and Log in -> where you're logged in பகுதியில் எந்த கணினியில் எல்லாம் நாம் லாக் இன் செய்துள்ளீர்கள் என்ற விடயம் இருக்கும். அதை செக் செய்து, உங்கள் கணினி, மொபைல் தவிர அனைத்தையும் லாக் அவுட் செய்து வையுங்கள்.
wo-factor authentication முறையில் உங்கள் மொபைல் நம்பரை இணைத்து வையுங்கள். அப்படிச் செய்தால் ஒவ்வொருமுறை லாக் இன் செய்யும் போதும் உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அதன்பின் லாக் இன் செய்து பாதுகாப்பாக இருக்கலாம்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1