iPhone கையடக்க தொலைபேசியில் புதிய தொழில்நுட்பம்!

6 சித்திரை 2018 வெள்ளி 14:58 | பார்வைகள் : 11202
இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகமான Bloomberg ஆனது எதிர்கால ஐ-போன்கள் தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இவை தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்டிராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக கெஸ்டர் தொழில்நுட்பம் எனப்படும் கை அசைவுகளை கொண்டு கைப்பேசியை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
இதே போன்ற எயார் கெஸ்டர் தொழில்நுட்பம் ஏற்கணவே சாம்சுங் நிறுவனத்தின் Galaxy S4 கைப்பேசிகளில் பகுதியாக உள்ளடக்கப்பட்டிருந்தது.
இது தவிர எதிர்கால ஐபோன்களின் திரைகள் வளைந்ததாக இருக்கும் எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை வளைந்த திரைகளைக் கொண்ட எந்தவொரு கைப்பேசியையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1