அசத்தும் புதிய அம்சங்களுடன் WhatsApp Update
2 பங்குனி 2018 வெள்ளி 04:51 | பார்வைகள் : 9190
ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு புதிய அப்டேட் மூலம் அசத்தும் அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். 2.18.30 வெர்ஷன் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 154.9 எம்.பி. அளவு கொண்ட புதிய அப்டேட் ஐ.ஓ.எஸ். 7.0 அல்லது அதற்கும் புதிய அப்டேட்களில் வழங்கப்படுகிறது.
புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படம் அல்லது வீடியோக்களில் நேரம் மற்றும் இருக்கும் இடத்தை ஸ்டிக்கர் வடிவில் சேர்க்க முடியும். இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்படிருக்கிறது.
புகைப்படம் அல்லது வீடியோக்களில் ஸ்டிக்கர் சேர்க்க கீபோர்டில் இருக்கும் + ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி ஆப்ஷன் திரையில் தெரியும், இதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும்.
இனி மீடியா பிரீவியூவில் எமோடிக்கான் ஐகானை கிளிக் செய்து நேரம் அல்லது இருக்கும் இடத்தை குறிக்கும் ஸ்டிக்கரை தேர்வு செய்தால் வேலை முடிந்தது. ஸ்டிக்கர்களை எடுக்க அவற்றை டிராக் செய்து குப்பை தொட்டி ஐகானில் வைக்க வேண்டும். இந்த ஐகான் திரையின் இடது புறத்தின் மேல் காணப்படும்.
இத்துடன் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட நபரை க்ரூப் இன்ஃபோ திரையில் இருந்தபடியே தேடவும் முடியும். இதன் மூலம் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட சிலருடன் மிக எளிமையாக நேரடியாக சாட் செய்ய முடியும்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், கூகுள் மற்றும் ஸ்னாப்சாட் போன்று வாட்ஸ்அப் செயலியிலும் விளம்பர தகவல்களை காட்சிப்படுத்துவது குறித்து வாட்ஸ்அப் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் விதிமுறைகளில் வாட்ஸ்அப் பயனர் தகவல்கள் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிஸ்னஸ் கணக்குகளில் விளம்பர தகவல்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.