அவதானம்! பேஸ்புக் எடுத்த அதிரடி முடிவு
7 சித்திரை 2017 வெள்ளி 10:08 | பார்வைகள் : 8767
பிறரின் அந்தரங்க புகைப்படங்களை மீள் பதிவு (Re Post) செய்வதையும், பகிர்வதையும் தடுக்க பெண்கள் பாதுகாப்பு இயக்கங்களோடு இணைந்து சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளது ஃபேஸ்புக்.
ஒரு ஆணும் பெண்ணும் சந்தர்ப்ப சூழல் காரணமாக உடலளவில் நெருக்கமாக இருக்கிறார்கள்.
அதை இருவரில் ஒருவர் படம் பிடித்து வைத்திருக்கிறார். இதை அவர்களில் ஒருவரால் சில காரணங்களால் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படுகிறது. இது வெகு விரைவில் பகிரப்பட்டு வைரகாலிறது.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே. இதுபோன்ற பழி வாங்கும் நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியாய் பேஸ்புக் முதற்படியை எடுத்து வைத்துள்ளது.
இதுபோன்ற பிறரின் அந்தரங்கக் காட்சிகளை மீள் பதிவு மற்றும் பகிர்வதை தடுக்க உலகம் முழுக்க இயங்கும் 150 பெண்கள் பாதுகாப்பு இயக்கங்களோடு இணைந்து சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளது பேஸ்புக்.
ஒருவருக்குத் தெரியாமல் அவர் குறித்த ஆபாசப் புகைப்படம் பதிவேற்றப்பட்டால், அதை அதில் இடம்பெற்றிருக்கும் நபரோ, வேறொருவரோ பேஸ்புக்கின் "ரிப்போர்ட் டூல்" ( Report Tool) மூலம் புகார் அளிக்கலாம்.
இந்தப் புகார்களின் அடிப்படையில் அந்தப் படத்தையோ, காட்சியையோ பரிசீலிக்க "தனி நிபுணர் குழு" ஒன்றை அமைத்துள்ளது பேஸ்புக்.
அவர்கள் அதைப் பரிசீலித்து, அது தவறாக இருப்பின், "புகைப்பட கண்டறிதல் மென்பொருளை" (Photo Recognition Software) கொண்டு அது மீள் பதிவு செய்யப்படுவது மற்றும் பகிரப்படுவதைத் தடுக்கிறார்கள்.
மேலும், எந்த பேஸ்புக் கணக்கிலிருந்து அது பதிவேற்றப்படுகிறதோ, அந்தக் கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது. இதன் மூலம், பேஸ்புக்கில் பெண்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம், இது முழுமையான பாதுகாப்பும் அல்ல. பதிவேற்றப்படும் படம் பேஸ்புக் அல்லாத வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டால் அதைத் தடுக்கும் வாய்ப்பு மிக குறைவே.
இருப்பினும், பெண்களுக்கு எதிரான "இணையப் பாலியல் வன்முறைகளை" தடுக்கும் முதற்படியாக இது அமையவுள்ளது. பேஸ்புக்கில் மட்டுமல்லாது மெஸெஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகதளங்களிலும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.