மனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி கண்டுபிடிப்பு!
30 பங்குனி 2017 வியாழன் 08:28 | பார்வைகள் : 8310
மனித மூளையுடன் இணைந்து செயற்படும் கணனி மற்றும் தொழிநுட்ப சாதனங்களை உருவாக்கும் முயற்சியில், நியூரோலிங் எனும் நிறுவனத்தை உருவாக்கி உற்பத்திகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா தொழிநுட்ப நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியான எலான் மெஸ்க் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நியூரோலிங் உற்பத்தித்தி செய்யவுள்ள தொழிநுட்பசாதனங்கள் யாவும், மனித மூளையை மென்பொருள்களுடன் இணைத்ததாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மனித ஞாபக சக்திகளை கணனிமயமாக்கும் முயற்சியாகவே இதை நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இந்நிலையில் நியூரோலிங்கின் பயன்கள் குறித்து அண்மையில் சமூகவலைத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ள எலான் மெஸ்க், நியூரா லேஸ் முறையை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும், குறித்த தொழிநுட்பத்தை கொண்டு மனிதர்கள் மருத்துவ முறைகளில் பல்வேறுபட்ட நரம்பியல் சார்ந்த நோய்களை குணப்படுத்தி கொள்ளகூடிய வாய்ப்பை உருவாக்குமென தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த தொழிநுட்பமுறைகளை மிகவும் ஆபத்தானவையாக கூறுவதால், அதன் பயனாளர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு நியூரோலின்க் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள், எதிர்வரும் மாதங்களில் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், மனிதர்களை கணினியுடன் இணைத்து செயற்படுத்த வைக்கும் வழிமுறைகளை எளிமையாக்கி, உருவாகும் ஆபத்துகளை வெகுவாக குறைக்குமென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.