Paristamil Navigation Paristamil advert login

இணைய பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஆராய்ச்சியாளர்களின் அற்புத கண்டுபிடிப்பு

இணைய பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஆராய்ச்சியாளர்களின் அற்புத கண்டுபிடிப்பு

20 பங்குனி 2017 திங்கள் 11:13 | பார்வைகள் : 8624


 நுாறு மடங்கு அதிவேக இணைய சேவை வழங்கும் புதுவகை வைபையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்பாரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட அது 100 மடங்கு வேகத்தில் இணைய சேவை பெறமுடியும். புதிய வழிமுறையால் அதிகளவு சாதனங்களுக்கு ஒரே சமயத்தில் இணையத்தில் வழங்க முடியும்.

 
இன்பாரெட் பயன்படுத்துவதால் இது உடல் ரீதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வைபைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்களை பயன்படுத்துகின்றன. புதிய அமைப்பு இன்பாரெட் அமைப்புகள் 1500 நானோமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுகளை பயன்படுத்துகின்றன. 
 
ஆய்வின் போது சுமார் 2.5 மீட்டர் தொலைவில் நொடிக்கு 42.8 ஜிபி என்ற வேகத்தில் இணையத்தினை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வழிமுறைகளில் அதிசிறந்த நிலைகளிலும் நொடிக்கு 300 எம்பி என்ற வேகத்தில் மட்டுமே இணையத்தினை பயன்படுத்த முடியும். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்