Paristamil Navigation Paristamil advert login

ஜிமெயில் வழங்கியுள்ள புதிய வசதி..!

ஜிமெயில் வழங்கியுள்ள புதிய வசதி..!

18 பங்குனி 2017 சனி 11:07 | பார்வைகள் : 8300


 ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனுடாக ஜிமெயிலில் வரும் காணொளிகளை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக பார்க்க முடியும். வீடியோ பயனுள்ளதாக இருப்பின் அதை டவுன்லோடு செய்யலாம்.

 
புதிய வசதியின் மூலம் பாவனையாளர்களுக்கு அதிகளவு இணைய வீதங்களை சேமிக்க முடியும். முன்னதாக ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் காணொளிகளை பதிவிறக்கம் செய்யாமல் பார்க்க முடியாது. ஆனால் புதிய வசதியின் மூலம் காணொளிகளை பதிவிறக்கம் செய்யாமலேயே காணொளி முன்னோட்டத்தை பார்க்க முடியுமென கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இனி வரும் காலங்களில் காணொளி இணைக்கப்பட்ட மின்னஞ்சல்களில் பதிவிறக்கம் செய்யும் குறியீட்டிற்கு அருகில், காணொளி ஒளிபரப்பு (streams - ஸ்ட்ரீம்) செய்யக் கோரும் குறியீடு வழங்கப்படும் எனவும், கூகுளின் யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் ஏனைய காணொளி ஒளிபரப்புகளுக்கு பயன்படுத்தப்படும் உள்கட்டமைப்புகளை கொண்டு சீரான தரத்தில் காணொளிகள் வழங்கப்படுமென கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் புதிய தொழிநுட்ப நிர்மாணங்கள் அறிமுகமாகவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த புதிய ஜிமெயில் வசதிகள் 15 நாட்களில் வழங்கப்படவுள்ளது. மேலும் குறித்த மின்னஞ்சல் பக்கத்தினுடாக உள்வாங்கும் அளவை அதிகரித்தமை மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான ஜிமெயில் செயலியில் பணம் அனுப்பும் வசதியை அமெரிக்காவில் மட்டும் கூகுள் வழங்கியமையை தொடர்ந்து காணொளிகளுக்காக புதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்