Facebook அறிமுகம் செய்யும் Messenger Day
10 பங்குனி 2017 வெள்ளி 10:54 | பார்வைகள் : 8758
என்றென்றும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் விரைவில் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை எட்டவுள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியாக தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை அந்நிறுவனம் வழங்கிக்கொண்டே வருகின்றது.
இவற்றின் வரிசையில் தற்போது Messenger Day எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சில நாடுகளில் ஏற்கணவே பரீட்சிக்கப்பட்ட நிலையிலேயே உலகெங்கிலும் Android மற்றும் iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்படுகின்றது.
இதன் ஊடாக அடுத்ததாக தாம் செய்யவிருக்கும் விடயங்களை நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பரிமாறிக்கொள்ள முடியும்.
எனவே நண்பர்கள் அனைவரும் ஒருவரின் எதிர்கால செயற்பாடுகளை அறிந்துகொள்ள முடியும்.
இதேவேளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பரிமாறிக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது.