மூளை நினைப்பதை டைப் செய்யும் கணினி கண்டுபிடிப்பு!
24 மாசி 2017 வெள்ளி 14:29 | பார்வைகள் : 8640
மூளை நினைப்பதை டைப் செய்யும் கணினியை அமெரிக்காவின் ஸ்டேண்ட் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை-கால் செயலிழந்து விடும். அதேபோல் சிலருக்கு வாய் பேசவும் முடியாது. எனவே இவர்கள் தகவல் பரிமாற்றங்கள் செய்வது இயலாத ஒன்று.
இந்த பக்காவாத நோயினால் பதிக்கப்படவர்கள், தங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்ள புதிய கணினி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஸ்டேண்ட் போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த கணினியை கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த கணினி மூளையில் நினைப்பதை அப்படியே டைப் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மின்சார தாக்குதலால் கை - கால் செயலிழந்த மற்றும் வாய் பேச முடியாத ஒருவரை வைத்து ஆய்வு செய்தனர். அவருடைய மூளையில் நினைப்பதை கணினி மூலமாக டைப் செய்ய முயற்சித்தனர்.
தற்போது இந்த முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளனர். இந்த கருவியை தலையின் மேல் பகுதியில் பொருத்திக்கொண்டால் வேண்டும். மூளையில் நடக்கும் அதிர்வுகளை துல்லியமாக கணித்து அவர் பேச வேண்டியதை டைப் செய்து தருகிறது.
மேலும் இதில் சில மாற்றங்களை செய்து எளிமையாக உருவாக்க முயற்சி செய்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.