iPhone 8 இல் அறிமுகமாகவுள்ள அதிரடி வசதி!
20 மாசி 2017 திங்கள் 17:09 | பார்வைகள் : 8819
இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஆப்பிள் நிறுவனமானது iPhone 8 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
மூன்று வெவ்வேறு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிகள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது முகத்தினை ஸ்கான் செய்யக்கூடிய முப்பரிமாண (3D) ஸ்கானர் இணைக்கப்படவுள்ளது.
இதன் மூலம் கைப்பேசியினை பாவனை செய்பவர்களின் முகத்தினை கடவுச் சொல்லாக பயன்படுத்த முடிம்.
இது பாதுகாப்பினை அதிகரிக்கும் ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது.
இத் தொழில்நுட்பமானது இதுவரை எந்தவொரு கைப்பேசிகளிலும் தரப்படவில்லை.
எனினும் இப் புதிய தொழில்நுட்பம் இணைக்கப்படுவதால் வெளிவரவுள்ள ஐபோன்களின் விலையானது 10 டொலர்கள் தொடக்கம் 15 டொலர்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.