ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் சாம்சுங்!
14 மாசி 2017 செவ்வாய் 12:21 | பார்வைகள் : 8676
ஸ்மார்ட் கைப்பேசி உலகில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சுங் ஆகியவற்றுக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றமை தெரிந்ததே.
எனினும் இதனையும் தாண்டி சில தொழில்நுட்ப மாற்றீடுகளில் இவ்விரு நிறுவனங்களும் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து பணியாற்றுகின்றன.
இதேபோன்று தற்போது ஆப்பிள் நிறுவனம் புதிதாக வடிவமைக்கவுள்ள iPhone 8 இற்றாக சாம்சுங் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
அதாவது iPhone 8 கைப்பேசிகளுக்கு தேவையான OLED திரைகளை சாம்சுங் நிறுவனமே வடிவமைத்து வழங்கவுள்ளது.
இதற்காக 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன் அடிப்படையில் சுமர் 100 மில்லியன் OLED திரைகளை ஆப்பிள் நிறுவனத்திற்காக சாம்சுங் நிறுவனம் வடிவமைத்து வழங்கவுள்ளது.
OLED திரையானது தற்போதுள்ள 95 சதவீதமான ஸ்மார்ட் கைப்பேசிகளில் பாவனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.