Facebook ஹேக்கிங்கைத் தவிர்க்க உதவும் யுஎஸ்பி சாவி!

28 தை 2017 சனி 17:00 | பார்வைகள் : 11472
சமூகவலைதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக் நிறுவனம், பாஸ்வேர்டுகளுடன் யுஎஸ்பி வடிவிலான திறவுகோல் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
’செக்யூரிட்டி கீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு திறவுகோலை உங்களது கணினியின் யுஎஸ்பி போர்ட் மூலம் இணைத்து உங்கள் அக்கவுண்ட்டில் லாக்இன் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிடோ யு2எஃப் செக்யூரிட்டி கீ (FIDO U2F security key)எனப்படும் யுஎஸ்பி பென்ட்ரைவ்வை திறவுகோலாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
நெட்டிசன்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள யுனிவர்சல் செகண்ட் பேக்டர் (Universal 2nd Factor) எனப்படும் பாதுகாப்பு அம்சம் பென்ட்ரைவ் வடிவிலான பாதுகாப்பினை பல்வேறு நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி வருகின்றன. இதுவே யு2எஃப் (U2F) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக பேஸ்புக் பாதுகாப்புக் குழு வெளியிட்டுள்ள விளக்கத்தில், பயனாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களும் ஹேக் செய்யப்படலாம் என்பதால் யு2எஃப் பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் பேஸ்புக் பாஸ்வேர்டினை அளித்த பின்னர், யு2எஃப் பென்ட்ரைவ் மூலம் அடையாளத்தை உறுதி செய்து லாக்இன் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.