Samsung Galaxy போன்கள் வெடிப்பதற்கான காரணம் வெளியானது!
16 தை 2017 திங்கள் 13:59 | பார்வைகள் : 8774
சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறியதால், போன்களை திருப்பி பெற்றுக் கொண்ட சாம்சங் நிறுவனம் உற்பத்தியையும் நிறுத்தியது.
இதனால் பயனாளர்கள் மத்தியில் சாம்சங் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை சரியத் தொடங்கியது, லாபமும் சரிவை சந்தித்தது.
இந்நிலையில் போன்கள் வெடித்து சிதற அதிலுள்ள பற்றரிகள் தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான அறிக்கையை ஜனவரி 23ம் திகதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிகிறது.
மேலும் போன்களை கையாள்வது தொடர்பாக விரிவான அறிக்கையை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
இதனால் சாம்சங் நிறுவனத்துக்கு 19 பில்லியன் டொலர் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.