உங்க ஸ்மார்ட்போன் சூடாகாமல் பாதுகாக்க சிறந்த வழி!
8 தை 2017 ஞாயிறு 16:29 | பார்வைகள் : 8617
உலகளவில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஸ்மார்போன்களில் பொது பிரச்சனையாக பலருக்கும் இருப்பது சீக்கிரம் அது அதிக சூடாகி விடுவது தான்.
அப்படி சூடாவதை தடுப்பது எப்படி?
ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் சார்ஜ் போடகூடாது. பலர் சார்ஜ் போட்டு விட்டு அப்படியே மறந்து விடுவார்கள். இது தவறாகும்.
மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. பெரும்பாலும் அதிவேகமாக இயங்கக்கூடிய மொபைல் போன்கள் அடிக்கடி சூடாகும்.
ஒரே நேரத்தில் பல விதமான செயலிகளை உபயோகப்படுத்தகூடாது. இதனால் செல்போனின் வேகம் குறைவதுடன் அது சீக்கிரம் சூடாகி விடுகிறது.
3G மற்றும் 4G போன்ற தரவுகளை அதிக நேரத்திற்கு பயன்படுத்தினால் போனுக்கு வெப்பம் உண்டாகும். ஸ்மார்ட்போனை தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுவதற்கு பயன்படுத்தினால் போன் வெப்பம் அடைகின்றது
ஸ்மார்ட்போனின் ஓஎஸ் மற்றும் மற்ற ஆப்ஸ்களை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ளவும். இப்படி செய்யவில்லை என்றால் மொபைலுக்கு சூடு அதிக அளவில் ஏற்பட்டு விரைவில் பாதிப்பு வந்து விடும்.