பழைய மொபைல்களில் WhatsApp இயங்காதது ஏன்?
6 தை 2017 வெள்ளி 16:05 | பார்வைகள் : 9222
உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் வாட்ஸ்அப் திடீரென வேலை செய்யவில்லையா? இதற்கு ஒரே வழி சந்தையில் புதிய பதிப்பு ஆண்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ் மொபைல்களை வாங்குவதே.
ஆண்ட்ராய்ட் 2.1 அல்லது 2.2. உள்ளிட்ட பழைய பதிப்புகளிலும், ஐஃபோன் 3ஜிஎஸ் மாடலிலும், ஐஓஎஸ் 6 பதிப்பை வைத்திருக்கும் பழைய மொபைல்களிலும், விண்டோஸ் 7 இருக்கும் மொபைல்களிலும் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வசதிகளை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள் வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கு புதிய பதிப்பு இயக்குதளம் (operating system) இருக்கும் மொபைல்கள் தேவைப்படும்.
2017-ஆம் வருடம் வாட்ஸ் அப்பில் இன்னும் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, ஒரு செய்தியை அனுப்பிய பிறகும் அதை மாற்றியமைக்க அல்லது மொத்தமாக நீக்கும் வசதி வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Settings பக்கத்தில் இருக்கும் About என்கிற தேர்வை தேர்ந்தெடுத்து உங்கள் மொபைலின் பதிப்பு என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.