iPhone பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

21 மார்கழி 2016 புதன் 14:01 | பார்வைகள் : 12236
செல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி வந்துள்ளது.
அதாவது மற்ற போன்களில் இருப்பது போல இரண்டு சிம் கார்டுகளை போடும் வசதி ஐபோனில் எந்தவொரு மொடல்களிலும் இதுவரை இருந்ததில்லை.
ஆனால் தற்போது இந்த விடயம் நடப்பதற்கான சூழலை ஐபோன் நிறுவனமே உருவாக்கியுள்ளது. ஆமாம், இரண்டு சிம் கார்டுகளுடன் போன்களை உருவாக்க ஐபோன் நிறுவனத்துக்கு தற்போது காப்புரிமை கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள United States Patent and Trademark Office (USPTO) தொழில்நுட்ப நிறுவனம் தான் இந்த காப்புரிமையை ஐபோன் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
இதனால் இனி வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன்களில் இரண்டு சிம்கார்டுகள் போடும் வசதி வரலாம் என வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025