இனி WhatsApp மெசேஜை எடிட் செய்யலாம்...!
16 மார்கழி 2016 வெள்ளி 12:24 | பார்வைகள் : 9092
வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜை அனுப்பி விட்டால் அதனை டெலிட் செய்யவோ, எடிட் செய்யவோ முடியாது. பெரிய குறையாகஇருந்த இதனை சரிசெய்யும் விதமாக வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பிய மெசேஜை திருத்தம் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.
வாட்ஸ் ஆப் மெசேஜிங் அப்ளிகேஷனில் அனுப்பிய மெசேஜை திருத்தம் செய்யும் வசதி மற்றும் டெலிட் செய்யும் வசதி குறித்த சோதனை முயற்சி ஐபோன்களில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த முயற்சி வெற்றி பாதையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் மாற்றப்பட்டுவிடும். டெலிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும். விரைவில் வாட்ஸ்ஆப்பில் உள்ள ஆப்ஷன்ஸ்களில் டெலிட், ரிவோக் அல்லது எடிட் ஆப்ஷன்ஸ்களும் இணைந்து விடும்.