Paristamil Navigation Paristamil advert login

அவதானம் - Android போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்!

அவதானம் - Android போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்!

3 மார்கழி 2016 சனி 16:59 | பார்வைகள் : 8395


 தற்போது உள்ள காலக்கட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் Android போன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 
இந்த நிலையில் Android போன்களைத் தாக்கி அதிலுள்ள தகவல்களைத் திருடும் கூலிகன் எனும் வைரஸ் உலா வருவதாக அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
இந்த வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட Android போன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
 
மேலும், இந்த மால்வேரால் சராசரியாக தினந்தோறும் 13,000 Android கருவிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
பாதிப்பு யாருக்கு?
 
Android இயங்குதளத்தின் மூலம் இயங்கும் கருவிகளை மட்டுமே இந்த கூலிகன் மால்வேர் தாக்குகிறது. அதனாலேயே கூலிகன் என பெயர் பெற்றது.
 
அதிலும் குறிப்பாக ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் போட்டோஸ், கூகுள் டாக்ஸ், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் கணக்குகளின் தகவல்களையும் தாக்குகிறது.
 
இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் கூகுள் கணக்குகள் முடங்கும் அபாயமும் உண்டு. கூகுளின் Android இயங்குதளங்களான ஜெல்லி பீன், கிட் கேட் மற்றும் லாலி பாப் ஆகிய இயங்குதளம் மூலமாக இயங்கும் கருவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன.
 
கூலிகனால் பாதிக்கப்பட்ட மொத்த கருவிகளில் 57 சதவீத கருவிகள் ஆசியாவில் உள்ளன, அதேநேரம் 9 சதவீத கருவிகள் ஐரோப்பாவில் உள்ளன.
 
தாக்குதல் குறித்து எப்படி அறியலாம்?
 
https://gooligan.checkpoint.com/ என்ற இணையதளத்துக்குச் சென்று உங்களது Android கருவியுடன் தொடர்புடைய கூகுள் இ-மெயில் முகவரியை அளித்து உங்களது கருவி பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
பாதிப்பிலிருந்து மீள்வது எப்படி?
 
உங்களது Android கருவி கூலிகன் தாக்குதலுக்கு உள்ளானதை அறிந்தால், பிளாசிங் (Flashing) எனப்படும் இயங்குதளத்தை சுத்தம் செய்யும் நடைமுறையை உடனடியாக செய்யுங்கள். அதன்பின்னர் உங்கள் கூகுள் கணக்குகளின் கடவுச் சொல்லை உடனடியாக மாற்றுங்கள். அதுவே சிறந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
 
Google Play Store-ல் இலவசமாகக் கிடைக்கும் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமே கூலிகன் உங்கள் மொபைலைத் தாக்கும் என்று அமெரிக்க நிறுவனமான செக் பாயிண்ட் தெரிவித்துள்ளது. இதனால் பாதுகாப்பில்லாத மொபைல் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்வதை தயவு செய்து தவிர்க்கும் படி கூறியுள்ளது.
 
நம்பகத்தன்மையான ஆண்டிவைரஸ் சாப்ட்வேர்கள் மூலமாக உங்களது Android கருவிகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்