விரைவில் WiFi சேவையை அறிமுகப்படுத்த பேஸ்புக் நடவடிக்கை
28 கார்த்திகை 2016 திங்கள் 19:09 | பார்வைகள் : 9146
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், அதன் பயனாளர்களுக்கு WiFi சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள அதன் பயனாளர்களுக்கு ‘Express WiFi’ எனும் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இணைய சேவை இல்லாத பல கிராமங்களில் உள்ள பயனாளர்கள் இணைய வசதியை பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பேஸ்புக் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு இணைய இணைப்பை அதிகரிக்க இந்த Express WiFi சேவையை பறக்கும் விமானங்களில் ‘லேசர் ட்ரான்ஸ்’ என்ற தொழில்நுட்பம் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்காக இந்தியாவில் உள்ள இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேஸ்புக் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்து விரிவான தகவல் வெளியாகும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Express WiFi அறிமுகப்படுத்தப்பட்டால், பேஸ்புக்கின் இதற்கான பிரத்தியேக அப்ளிகேஷன் மூலம் WiFi வசதியை எளிதாக பெறமுடியும் என்று பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.