whatsapp பயனாளர்களுக்கு இந்த விடயம் தெரியுமா?
20 கார்த்திகை 2016 ஞாயிறு 15:08 | பார்வைகள் : 8722
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை. வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அதில் உங்களுக்கு தெரியாத சில அம்சங்கள் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில், நண்பர்களுக்கு எத்தனை வாட்ஸ் அப் மெசேஜ் நான் அனுப்பியுள்ளோம், அல்லது எத்தனை மெசேஜ் பெற்றுளோம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது குறித்து பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் வாட்ஸ் அப் மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வது?
முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு கைப்பேசியில் வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்து எந்த நண்பரின் மெசேஜ் எண்ணிக்கை தெரிந்து கொள்ள வேண்டுமோ அவர் பெயரை க்ளிக் செய்ய வேண்டும்.
பின்னர், option பட்டனை க்ளிக் செய்து more >email chat செல்ல வேண்டும்.
இப்பொழுது இரு விதமான ஆப்ஷன்கள் தோன்றும். அதில் attach without media என்பதை க்ளிக் செய்து உங்களின் email id யை பதிவு செய்ய வேண்டும்.
இதன் பின்னர், நீங்கள் தேர்வு செய்த நண்பரின் மெசேஜ் எண்ணிக்கை மொத்தமும் டெக்ஸ் ஃபார்மேட்டில் வரும்.
பின்பு, அதை டவுன்லோடு செய்து notepad-ல் பேஸ்ட் செய்தால் உங்கள் நண்பர் உங்களுக்கு அனுப்பிய மெசேஜ்களின் எண்ணிக்கையும், நீங்கள் அவருக்கு அனுப்பிய மெசேஜ்களின் எண்ணிக்கையும் தெரிந்து கொள்ளலாம்.
ஐஓஎஸ் கைப்பேசிகளில் எப்படி வாட்ஸ் அப் மெசேஜ்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வது?
முன்னர் குறிப்பிட்டவாறே வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்து செட்டிங் என்ற ஆப்ஷன் செல்ல வேண்டும்.
பின்பு, account என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து பின்னர் தொடர்ந்து, storage usage என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
தற்போது, மொத்தம் எத்தனை மெசேஜ்கள் வாட்ஸ் அப்பில் உள்ளது என்பதும் ஒவ்வொரு நண்பரிடம் இருந்து எத்தனை மெசேஜ்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிய வரும்.
பின்பு, ஒரு குறிப்பிட்ட நண்பரின் பெயரை க்ளிக் செய்து, அவரிடமிருந்து எத்தனை மெசேஜ் வந்துள்ளது, அதில் புகைப்படங்கள் எத்தனை?, டாக்குமெண்டுகள் எத்தனை என்பதையும் அறியலாம்.
மேலும் நீங்கள் எவ்வளவு யூசேஜ் பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை அறிய கீழே உள்ள சைஸ் என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் நீங்கள் பயன்படுத்திய அளவை அறிந்து கொள்ளலாம்.