கடுப்பேற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால்!
18 கார்த்திகை 2016 வெள்ளி 13:02 | பார்வைகள் : 9035
பிரபல மெஸேஜிங் பிளாட்பார்மான வாட்ஸ் அப் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் என அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை அதிராகப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ காலிங் வசதி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இது பலருக்கும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
ஸ்கைப், பேஸ்டைம், இமோ ஆகிய வீடியோ காலிங் ஆப்ஸ்களோடு ஒப்பிடுகையில் இந்த வாட்ஸ்அப் வீடியோ கால் பயனர்களுக்கு சிறந்த ஒரு தேர்வாக இல்லை.
மற்ற வீடியோ அழைப்புகளோடு ஒப்பிடுகையில் வாட்ஸ் அப் வீடியோ தரம் சிறந்ததாக இல்லை. அதே போல் மோசமான ஒரு உரையாடலை வாட்ஸ் அப் வீடியோ கால் நிகழ்த்துகிறது.
அதுமட்டுமல்லாமல் முக்கியமாக வீடியோ காலிங் வசதி டேட்டாவை மிச்சப்படுத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்.
ஆனால் வாட்ஸ் அப் வீடியோ காலிங்கில் மற்ற ஸ்கைப், பேஸ்டைம் உள்ளிட்ட வீடியோ அழைப்பு பயன்பாடுகளோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவிலான டேட்டாவை எடுத்துக் கொள்கிறது