ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கான காரணம் வெளியானது!
15 கார்த்திகை 2016 செவ்வாய் 13:06 | பார்வைகள் : 8988
சமீபத்தில் சாம்சங், ஐபோன் என ஸ்மார்ட் போன்கள் வெடிப்பதால் அதை உபயோகிக்க சற்று யோசிக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில், போன்கள் தீப்பிடித்து எரிவதற்கு என்ன காரணம் என சில ஆய்வாலர்கள் கண்டெரிந்து கூறியிள்ளனர்.
போன் தயாரிப்பாளர்கள் தங்களின் போன்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெற வேண்டும் என்பதற்காக, மிக விரைவில் சார்ஜ் ஆகும், அதிக நேரம் சார்ஜ் நீடிக்கும் போன்ற அறிவிப்புகள் வெளியிடுகின்றனர்.
ஆனால், பேட்டரி என்பது ஒரு ரப்பர் போன்றது. அதனால் எவ்வளவு இழுவை தாங்க முடியுமோ அவ்வளவு மட்டும் தான் தாங்கிக் கொள்ளும். அதன் பின் அறுந்து விடும்.
இதே போல தான் பேட்டரியும் தனக்கான சார்ஜ் ஆகும் நேரம் குறைத்து வடிவமைக்கும் போது அது வெடிக்கும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.