ஸ்கைப் செயலியின் புதிய வசதிகள்!
8 ஆடி 2017 சனி 14:53 | பார்வைகள் : 9137
இணைய வழித்தொடர்புகளில் ஸ்கைப் செயலி மிக அதிகப்படியாக அளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஸ்கைப் எப்ளிகேசன் அந்தளவிற்கு உலக பிரசித்தி பெற்ற சேவையாக இருந்து வருகின்றது. தற்போது இதனை கையடக்கத்தொலைபேசி சாதனங்களிலும் பயன்படுத்துவதற்கான செயலிகளும் இருக்கின்றன. இப்போது ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கான புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட இருக்கின்றது.
ஸ்கைப்பின் இந்த புதிய பதிப்பானது முற்றிலும் புதிய தோற்றத்தினை கொண்டதாக காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் சில புதிய வசதிகளையும் இது பெற்றுள்ளது.
அதில் ஒன்று தான் இன்கால் ரியாக்சன்ஸ் எனப்படுகின்ற வசதியாகும். இதன் மூலமாக அழைப்பில் இருக்கும் போதே லைவ் ஈமோஜிக்கல், லைவ் டெக்ஸ்ட், ரியல் டைம் போட்டோஸ் ஆகியவற்றினை பயன்படுத்திட முடியும்.
இதனில் கூடுதல் வசதியாக மெசேஜ் ரியாக்சன்ஸ் இருக்கின்றது. இதன் மூலமாக குறும் செய்திகளை அனுப்பும் போது எக்ஸ்பிரசிவ் ரியாக்சன்ஸ்களை பயன்படுத்தி உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திட முடியும். அத்துடன், அன்றாட நடவடிக்கைகளை ஹைலைட் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பினை ஐ டியூன் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.