வேவு பார்க்கும் Web Camera! அவதானம்
20 ஆனி 2017 செவ்வாய் 16:28 | பார்வைகள் : 13455
வெப் கேமிராக்கள் மூலம் நீங்கள் உளவு பார்க்கப்படலாம் என்று பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எஃப்-செக்யூர் (F-Secure) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள வெப் கேமிராக்கள் மூலம் பயனாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் வெப் கேமிரா இயக்கத்துக்காக பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களில் 18 விதமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இவற்றின் மூலம் பயனாளர் ஒருவரின் வெப் கேமிராவை இயக்கி, அந்த வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும் என்ற அதிர்ச்சித் தகவலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது உங்கள் வீட்டு டெஸ்க் டாப்பில் உள்ள வெப் காமிரா நீங்கள் நினைத்தால்தான் ஆன் ஆகும். ரெக்கார்ட் செய்யும் என்பதில்லை.
ஒரு குறிப்பிட்ட சாஃப்ட் வேர் மூலம் உங்கள் வெப்காமிராவை வெளியில் இருந்து இயக்க முடியும். உங்களுக்குத் தெரியாமலே அது ஆன் ஆகி, உங்களைப் படம் பிடிக்கும். அது முழுவதையும் ஒரு வீடியோ தொகுப்பாகி வெளியிலும் ஷேர் செய்யவும் முடியுமாம்.
ஃபோஸ்காம் நிறுவனம் தயாரித்துள்ள வெப்கேமிராக்களில் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள எஃப்-செக்யூர் நிறுவனம், இந்த குறைபாடுகள் தொடர்பாக ஃபோஸ்காம் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை என்றும் கூறியுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan