ஸ்மார்ட்போனில் அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் apps
18 ஆனி 2017 ஞாயிறு 13:15 | பார்வைகள் : 8391
உங்கள் ஸ்மார்ட்போனில் இன்பில்ட் மெமரி குறைந்தால், போன் செயல்படும் வேகம் கணிசமாக பாதிக்கப்படும்.
இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும். செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் இவை முக்கியமான பங்காற்றுகின்றன.
ரேம் மெமரி மட்டுமல்லாது, இன்பில்ட் மெமரியிலும் கணிசமான இடைத்தை செயலிகள் ஆக்கிரமித்துக் கொள்வதுண்டு. போன் மெமரியை அதிகம் ஆக்கிரமிக்கும் செயலிகள் குறித்து பார்க்கலாம்.
ஃபேஸ்புக், உபர், ஜிமெயில் மற்றும் ஸ்நாப் சாட் போன்ற செயலிகளே மெமரியை அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக சமீபத்திய ஒரு ஆய்வு கூறுகிறது.
இதுதொடர்பாக சென்சார் டவர் எனும் அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
உதாரணமாக, ஃபேஸ்புக் செயலியை எடுத்துக் கொள்ளலாம். கடந்த மே 2013ல் ஐபோனில் 32 எம்.பி. (MegaBytes) இடத்தைப் பிடித்த ஃபேஸ்புக் செயலி, தற்போது 388 எம்.பி. இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அதாவது 12 மடங்கு அதிகமான இடத்தினை ஃபேஸ்புக் செயலி எடுத்துக் கொள்கிறது. அதேபோல 2013ல் 4 எம்பி சைஸில் இருந்த ஸ்நாப்சாட் செயலி தற்போது, 203 எம்பி சைஸ் கொண்டதாக மாறியுள்ளதாக சென்சார் டவர் கூறியுள்ளது.