iPhone 8 ஸ்மார்ட்போனின் வடிவங்கள் வெளியானது!
15 ஆனி 2017 வியாழன் 12:51 | பார்வைகள் : 13963
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 8 இனை வெளியிடுவதற்கு இன்னும் சில மாதங்களே காணப்படுகின்றன.
இதேவேளை இக் கைப்பேசிகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மூன்று பதிப்புக்களாக வெளிவரவுள்ள இக் கைப்பேசிகள் வெவ்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் வடிவத்தில் ஒத்திருக்கும் என நம்பப்படுகின்றது.
இந்நிலையில் iPhone 8 கைப்பேசிகளின் முற்புற மற்றும் பின்புற தோற்றத்தினை எடுத்துக்காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் இக் கைப்பேசிகளில் iOS 11 இயங்குதளப் பதிப்பும் உள்ளடக்கப்படவுள்ளது.
தவிர தற்போது உள்ள ஐபோன்களை விடவும் கூடிய பிரதான நினைவகத்தினையும் இவை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐபோன் வடிவமைப்பில் களமிறங்கிய ஆப்பிள் நிறுவனம் இவ்வருடம் 10 வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.



























Bons Plans
Annuaire
Scan